வளைகாப்பு பத்ததி
- பிள்ளையார் பூஜை
- பிள்ளையார் யதாஸ்தானம்
- பெண்ணுக்கு தாயார் வீட்டில் கொடுக்கும் புடவை ஓதி இடல்
- புதிது உடுத்திக்கொண்டு வந்தவுடன் மஞ்சள் குங்குமம் கொடுத்து கங்கண தேவதைக்கு (தங்க வளையல், கண்ணாடி வளையல்) ஸ்ரீ ஸூக்தம் அல்லது லட்சுமி அஷ்டோத்ரம் சொல்லி தூப தீப நெய்வேத்தியங்கள் செய்யவேண்டும்.
- இரு வீட்டார் குல தெய்வங்களுக்கும வளையலும் , பிறக்கப் போகும் குழந்தைக்கு கருப்பு வளையலும் எடுத்து வைத்து விட்டு, முதலில் சிறு ஆண் குழந்தைக்கு வளையல் போடவேண்டும்.
- இரண்டு கன்யா குழந்தைகளுக்கு வளையல் போடவேண்டும்.
- தோழிப்பெண்ணுக்கு வளையல் போடவேண்டும்.
- ஐந்து சுமங்கலிகள் பெண்ணுக்கு வளையல் போடவேண்டும்.
- வலது கையில் ஒரு வளையல் அதிகமாக (ஒற்றை படையில்) இருக்குமாறு போடவேண்டும்.
- பூச்சூட்டல் செய்யவேண்டும்
- ஐந்து சுமங்கலிகள் முக்கியமாக நாத்தனார் இருந்தால் பெண்ணுக்கு சௌகரியத்தை அனுசரித்து உடுகரை வாங்கி கொடுத்து முதலில் பூச்சூட்ட வேண்டும்.
- நலங்கு
- ஆரத்தி
- மனையில் சீர் வைக்க மூன்று வித பக்ஷணம், இரண்டு ஸ்வீட், ஒரு ஜோடி கோபுரம், முக்கியமாக ஹொறிகொள்ளு , பொருள் விளங்கா உருண்டை இருக்கவேண்டும்.
Comments
Post a Comment