காயத்ரியைப் பற்றிய சில சிந்தனைகளும் குறிப்பிட்ட சில தேவதைகளின் காயத்ரிகளும் காயத்ரி மந்திரமானது சாதாரணமாக ப்ராஹ்மணர்கள் உபநயன காலத்தில் உபதேசிக்கப் பட்டு சந்தியா வந்தனத்தின் அங்கமாக ஜபிக்க பட்டு வருகிறது. இது 3 பாதங்களும் 24 அக்ஷரங்களும் கொண்டது. இந்த மஹா மந்திரமானது ருக் வேதம், சுக்ல யஜுர், கிருஷ்ண யஜுர், சாம வேதம் ஆகியவற்றில் இடம் பெறுவதால், மிகவும் மஹிமை வாய்ந்தது. இதனால் இது வேத மாத என்று அழைக்கப் படுகிறது. இதன் மூன்று பாதங்களிலும் ஒவ்வொரு பாதத்திலும் 8 அக்ஷரங்கள் வீதம் 24 அக்ஷரங்கள் இதன் வடிவம். இந்த காயத்ரியின் பாதார்த்தப் படி குறிப்பிடப்படும் தெய்வம் ஸவிதா என்ற சூரியன். அது பரப்ரஹ்ம வஸ்துவை குறிப்பிடும் மஹா மந்த்ரம். இதில் வித்மஹே, வரேண்யம், தீமஹி, ப்ரசோதயாத் என்ற நான்கு ஜீவா பதங்களை வைத்து யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகத்தில் 12 தேவதைகளுக்கு காயத்ரிகள் அமைந்துள்ளன. அவைகள் முறையே மஹாதேவர், ருத்திரன், கணபதி, நந்தி, ஷண்முகன், கருடன், பிரம்மன், விஷ்ணு, நரசிம்மன், ஆதித்தன், அக்னி, துர்கி என்ற தேவ...